2021 ஒக்டோபர் 18, திங்கட்கிழமை

கல்விச் சேவையிலிருந்து ஓய்வு

Princiya Dixci   / 2021 செப்டெம்பர் 23 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.ரி.சகாதேவராஜா

சம்மாந்துறை வலயக் கல்விப் பணிமனையின் விவசாய பாட ஆசிரிய ஆலோசகரான பி.இஸ்மாயில், தனது 33 வருட கல்விச் சேவையிலிருந்து நாளை(24) ஓய்வுபெறுகிறார்.

சம்மாந்துறையைச் சேர்ந்த இஸ்மாயில் 17 வருடங்கள் ஆசிரிய சேவையிலும், 15 வருடங்கள் ஆசிரிய ஆலோசகராகவும் சேவையாற்றியுள்ளார்.

இவர், தனது ஆரம்ப, இடைநிலைக் கல்வியை சம்மாந்தறை அல்மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரியிலும் ,உயர்கல்வியை சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா விதியாலயத்திலும் பூர்த்தி செய்து, விவசாய டிப்ளோமா பயிற்சியை, அம்பாறை ஹார்டி உயர்தொழில்நுட்பக் கல்லூரியில் பூர்த்தி செய்தவராவார்.

சாளம்கைப்கேணி அஸ்ஸிராஜ் மகா வித்தியாலயம், அல்மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரி, தாருஸ்ஸலாம் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் கற்பித்தல் பணியில் ஈடுபட்டு வரவேற்பைப் பெற்றவராவார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .