2023 ஜூன் 01, வியாழக்கிழமை

தலையைக் காண்பிக்கும் பழைய மஸ்கெலியா நகர்

Freelancer   / 2023 மார்ச் 28 , மு.ப. 01:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள்

மலையக பகுதிகளில் உள்ள அனைத்து நீறூற்றுகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.

குறிப்பாக மவுஸ்சாகலை நீர்த் தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட சுமார் 62 அடி குறைந்த நிலையில் 76 அடிக்கு மட்டுமே தற்போது நீர் உள்ளது.

நீர்மட்டம் குறைந்து வருவதால், பழைய மஸ்கெலியா நகரில் இருந்த வணக்க ஸ்லதங்கள் அவ்வாறே காட்சியளிக்கின்றன.

எது எப்படியாயினும் கடந்த சில நாட்களாக மத்திய மலைநாட்டில் மாலை வேளையில் இடி மின்னலுடன் கனத்த மழை பெய்து வருகிறது.

இதனால் நீர் தேக்கங்களின் நீர் மட்டம் சற்று உயர்ந்த நிலையில் உள்ளது குறிப்பாக காசல்ரீ ,மேல் கொத்மலை ,மற்றும் விமல சுரேந்திர, லக்சபான, பொல்பிட்டிய, நவலக்சபான, கென்யோன் ஆகிய நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .