2022 ஜனவரி 21, வெள்ளிக்கிழமை

பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள் இடமாற்றம்

Editorial   / 2021 நவம்பர் 25 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.ரி.சகாதேவராஜா

அக்கரைப்பற்று வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் பி.எம்.வை.அறபாத், சம்மாந்துறை வலயத்துக்கு இடமாற்றம் பெற்றுள்ளார்.

அதேவேளை, சம்மாந்துறை வலய நிர்வாகத்துக்கான பிரதிக் கல்விப் பணிப்பாளர் அஹமட் கியாஸ், 06 வருட கால சேவையின் பின்னர் அக்கரைப்பற்று வலயத்துக்கு இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளார்.

சம்மாந்துறையைச் சேர்ந்த பிரதிக் கல்விப் பணிப்பாளர் பி.எம்.வை.அறபாத், 2013இல் இலங்கை கல்வி நிர்வாக சேவையில் இணைந்து, மட்டக்களப்பு மத்தி வலயத்தில் பணியாற்றி பின்னர் 2014 - 2019 வரை கல்முனை வலயத்தில் பிரதிக் கல்விப் பணிப்பாளராக பணியாற்றினார்.

அதன்பின்பு 2020-2021 வரை அக்கரைப்பற்று வலயத்தில் பணியாற்றிய அறபாத் கடந்த வாரம் சம்மாந்துறை வலயத்துக்கு இடமாற்றம் பெற்று வந்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X