2021 ஒக்டோபர் 26, செவ்வாய்க்கிழமை

“காணாமல் போன தந்தையை மீட்டுத்தருங்கள்”

R.Maheshwary   / 2021 செப்டெம்பர் 12 , பி.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். கிருஸ்ணா

கொத்மலை பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் சார்ஜனாக கடமையாற்றி வந்த, சுப்பையா இளங்கோவன் சுகயீனம் காரணமாக கடந்த 08 ஆம் திகதி கம்பளை மாவட்ட வைத்தியசாலையில் உறவினர்களினால் அனுமதிக்கப்பட்ட நிலையில், அன்றைய தினமே வைத்தியசாலையிலிருந்து காணாமல் போயுள்ளர்.

இதனையடுத்து, கம்பளை பொலிஸ் நிலையத்தில் உறவினர்களினால்  முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து, பொலிஸார்  விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதும் இதுவரையில் அவரை கண்டுபிக்கப்பட்டவில்லை.

எனவே, நான்கு நாள்களாக  தேடப்பட்டு வரும் தனது தந்தையை மீட்டுத்தாருங்கள் என,   மூத்த மகனான  இளங்கோவன் அபிநாத் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

33 வருடங்களாக பொலிஸ் சேவையில் கடமையாற்றும் இவர், மலையக அரசியல்வாதிகளின் பாதுகாவலராகவும் கடமையாற்றியவராவார்.

சம்பவம் தொடர்பில் நுவரெலியா மாவட்ட உயர் மட்ட பொலிஸ் அதிகாரிகள் தெரிவிக்கையில், இளங்கோவன்  நோயுற்ற நிலையில் பயம் காரணமாக, நண்பர்கள் அல்லது உறவினர்கள் வீடுகளுக்கு சென்றிருக்கலாம் என்றும் கம்பளை மற்றும் கொத்மலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .