Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2023 ஜனவரி 30, திங்கட்கிழமை
Freelancer / 2022 நவம்பர் 24 , மு.ப. 08:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
க. அகரன்
வவுனியா நகர சபைக்குரிய காணிகள், அரசியல் கட்சிகளை சார்ந்த சங்கங்களுக்கு எவ்வித ஒப்பந்தங்களும் இன்றி, தாரை வார்க்கப்பட்டு வருவதாக வவுனியா மாவட்ட கால்பந்தாட்ட சங்கத்தின் தலைவரும் இலங்கை கால்பந்தாட்ட சங்கத்தின் உப பொருளாளருமான அ. நாகராஜன் குறிப்பிட்டுள்ளார்.
வவுனியாவில் ஓட்டோ உரிமையாளர் சங்கத்துக்கு நகர சபையின் காணிகளை எவ்வித ஒப்பந்தங்களும் இன்றி வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் கண்டித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது: வவுனியா நகர சபையின் ஆதனங்கள் பரந்து காணப்படுகின்றன. இவை மக்களின் நலன் கருதி பயன்படுத்துவதற்காக பல்வேறு தீர்மானங்களை நகர சபை அமர்வுகளில் எடுக்கப்பட்ட போதிலும், அது தொடர்பில் நகரசபை தலைவர் அசமந்தம் காட்டி வருகின்றமையால் எவ்வித அபிவிருத்திகளும் இடம்பெறவில்லை.
இந்நிலையில், தேசிய மட்டத்தில் பல்வேறு சாதனைகளை படைத்து, சமூக நலன்கருதி செயற்பட்டு வரும் வவுனியா கால்பந்தாட்ட அணிகளை உள்ளடக்கிய வவுனியா கால்பந்தாட்ட சங்கம், இதுவரை தனக்கான கட்டட வசதியின்றி காணப்படுகின்றது.
இது தொடர்பில், வவுனியா நகர சபை தலைவருடன் கலந்துரையாடிய போது, நகர சபை காணிகளை சங்கங்களுக்கு வழங்க முடியாது எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்களை முன்னிலைப்படுத்திய சங்கங்களுக்கு, நகர சபையின் காணிகளை எவ்வித ஒப்பந்தங்களும் இன்றி, நகர சபை வழங்கி வருகின்றமை பக்கச்சார்பான நடவடிக்கையாகவே பார்க்கப்பட வேண்டும்.
விளையாட்டுத்துறையை வளர்க்க வேண்டிய பொறுப்பில் உள்ள நகர சபை, அதைப் புறந்தள்ளிவிட்டு, வருமானமீட்டும் சங்கம் ஒன்றுக்கு காணியை தாரைவார்க்கின்றமை தொடர்பில் சந்தேகம் எழுகின்றது எனவும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். (a)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago