2021 செப்டெம்பர் 22, புதன்கிழமை

பிரதேச செயலகங்களின் ஊழியர்களுக்கு கொரோனா

Niroshini   / 2021 ஜூலை 26 , பி.ப. 02:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன், எம்.றொசாந்த்

 

கிளிநொச்சி - கண்டாவளை பிரதேச செயலக ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், செயலகத்தின் செயற்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த கண்டாவளை பிரதேச செயலகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர், எழுமாற்றான பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில், அவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்து, பிரதேச செயலகச் செயற்பாடுகள், இன்று (26) இடைநிறுத்தப்பட்டு, அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

ஊழியர்களின் பிசிஆர் முடிவுகள் வெளிவந்தப் பின்னரே, பிரதேச செயலகச் செயற்பாடுகளை ஆரம்பிப்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என்றும் பிறப்பு மற்றும் இறப்பு அத்தாட்சிப் பத்திரங்கள் உட்பட்ட மிக அவசியமான தேவைகளை மாத்திரம் அரச செயலகத்தின் ஊடாக பெற்றுக்கொள்ளுமாறும், பிரதேச செயலாளர் த.பிருந்தாகரன் தெரிவித்தார்.

அத்துடன், தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகஸ்தர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில், ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது,

பிரதேச செயலக திட்டமிடல் பிரிவில் கடமையாற்றும் அச்சுவேலி பகுதியை சேர்ந்த உத்தியோகஸ்தர் ஒருவருக்கே, இவ்வாறு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளத.

இதையடுத்து, பிரதேச செயலகத்தின் ஏனைய ஊழியர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 10க்கும் மேற்பட்ட உத்தியோகஸ்தர்களுக்கு தொற்று உறுதியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .