2022 ஜூலை 07, வியாழக்கிழமை

சீரற்ற வானிலையால் நால்வர் பலி: மூவர் மாயம்

Editorial   / 2021 மே 16 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் தற்போதும் நிலவும் சீரற்ற வானிலையால், 11,796 குடும்பங்களைச் சேர்ந்த 16,730 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

ஒன்பது மாவட்டங்களிலேயே இந்த பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. கண்டி, மாத்தளை, காலி, புத்தளம், குருநாகல், கம்பஹா, களுத்துறை, கொழும்பு மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களே பாதிக்கப்பட்டுள்ளன.

காலியில் இருவரும் கம்பஹா மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருமென நால்வர் மரணமடைந்துள்ளனர். கண்டி மாவட்டத்தில் இருவரும் காலியில் ஒருவருமென மூவர் காணாமல் போயுள்ளனர்.

சீரற்ற வானிலையால், மேலே குறிப்பிட்ட ஒன்பது மாவட்டங்களிலும் 636 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

பாதிக்கப்பட்டவர்களில், 304 குடும்பங்களைச் சேர்ந்த 1,247 பேர், 19 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .