2023 செப்டெம்பர் 24, ஞாயிற்றுக்கிழமை

போதைப் பொருளுடன் 321 நபர்கள் கைது

Freelancer   / 2023 ஜூன் 08 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி  மாவட்டத்தில்  ஜனவரி  முதலான  கடந்த  ஐந்து  மாதங்களில் 36. 227 கிலோ கிராம்  கஞ்சாவும்,  251.178  கிலோ கிராம்  ஹெரோயினும், 5.082 கிலோ கிராம்,  ஐஸ்  போதைப்பொருள்  என்பன  மீட்க்கப்பட்டுள்ளதுடன்   321 சந்தேக நபர்கள்  கைது  செய்யப்பட்டு  329  வழக்குகள்  பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் 35 இலட்சத்து  நாலாயிரத்து  500 ரூபாய் தண்டப் பணம் அறவிடப்பட்டுள்ளதாக  கிளிநொச்சி  பிராந்திய  பொலிஸ்  அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிளிநொச்சி  மாவட்டத்தில் அதிகரித்துவரும் போதைப் பொருள்  பாவனையைத் தடுக்கும்  வகையில்  பொலிஸாரால்  விசேட சுற்றி வளைப்புகள் முன்னெடுக்கப்பட்டு,  போதைப்பொருட்கள் மீட்கப்பட்டு வருவதுடன், சந்தேக நபர்களும்  கைது  செய்யப்பட்டு,  நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு  வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X