Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2021 டிசெம்பர் 02 , மு.ப. 11:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
குமரியில் அரசு பஸ் ஒழுகியதால் பயணிகள் குடை பிடித்தபடி பயணம் செய்யும் காட்சி சமூக வலைதளத்தில் பரவுவதால் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.
குடையுடன் பயணிகள்
குமரி மாவட்டத்தில் பரவலாக கடந்த சில வாரங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் தக்கலை காமராஜர் பஸ்நிலையத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு அரசு பஸ் ஒன்று நேற்று முன்தினம் புறப்பட்டது. அப்போது, மழை பெய்து கொண்டிருந்தது. அந்த பஸ்சின் மேற்கூரை சேதமடைந்து இருந்ததால் அதன் வழியாக ஆங்காங்கே மழைநீர் ஒழுகத் தொடங்கியது.
இதனால், பஸ்சில் இருந்த பயணிகள் இருக்கையில் அமர முடியாமலும், நிற்க முடியாமலும் பெரும் அவதிக்குள்ளாகினர். அதைதொடர்ந்து பஸ்சில் இருந்த பயணிகள் சிலர் தங்கள் பாதுகாப்புக்காக கொண்டு வந்த குடைகளை விரித்து பிடித்தபடி பயணம் செய்தனர்.
மழை கோட்டுடன் டிரைவர்
என்னடா இது நமக்கு வந்த கடும் சோதனை என்று மனதுக்குள் நினைத்துக்கொண்ட பயணிகள் அப்படியே டிரைவரை எட்டிப்பார்த்தனர். அங்கே, டிரைவரோ எல்லாம் அவன் செயல் என்பது போல மழை கோட்டு அணிந்து பஸ்சை ஓட்டிக்கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த னர்.
இந்த சம்பவத்தை பஸ்சில் பயணம் செய்த சிலர் தங்களது செல்போனில் அப்படியே படம்பிடித்துள்ளனர். பின்னர் அந்த காட்சிகளை சமூகவலைத்தளத்தில் பரவ விட்டுள்ளனர். இதை அதிகமான மக்கள் பார்த்து பகிர்ந்து வருகின்றனர். அதனால் இந்த காட்சி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சீரமைக்க வேண்டும்
எனவே, பயணிகளின் நலன் கருதி சம்பந்தபட்ட நிர்வாகம் சேதமடைந்த பஸ்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
5 hours ago
7 hours ago