2022 ஓகஸ்ட் 11, வியாழக்கிழமை

விவாகரத்து கேட்டதால் மனைவி, மகள் மீது சரமாரி வெட்டு

Freelancer   / 2022 ஜூலை 07 , மு.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருவள்ளூர், அப்துல்கலாம் தெருவைச் சேர்ந்தவர் சந்திரன் சேட்டு(52). இவரது மனைவி மஞ்சுளா (48). இவர்களது மகள் ஜெயஸ்ரீ (23). சந்திரனுக்கும், மஞ்சுளாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக எட்டு ஆண்டுகளாக பிரிந்து வாழ்கிறார்கள்.

இதற்கிடையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு மஞ்சுளா, கணவரிடமிருந்து விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு கடந்த இரண்டாம் திகதி விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது, தந்தைக்கு எதிராக ஜெயஸ்ரீ ஆஜரானதால், சந்திரன் ஆத்திரத்தில் இருந்துள்ளார்.

அதேதினம் இரவு எட்டு மணியளவில் ஜெயஸ்ரீ, மஞ்சுளா, அவரது உறவினர்  ஆகியோர் தங்களது வீட்டருகே பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த சந்திரன், மகளையும் மனைவியையும் அசிங்கமாக திட்டி 'என் மேலேயே கேஸ் போடுறீங்களா' எனச் சத்தம் போட்டு, தன் இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஜெயஸ்ரீயின் தலையில் வெட்டியுள்ளார்.

அப்போது மஞ்சுளா தடுத்தபோது, அவரது தலை, கை, கால் ஆகிய இடங்களில் வெட்டியுள்ளார். இதில் தாயும் மகளும் இரத்த வெள்ளத்தில் சரிந்தனர். அருகில் இருந்தவர்கள் சந்திரனை பிடிக்க முற்பட்டபோது, அவர்களையும் வெட்டிவிடுவதாக மிரட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். 

இதனையடுத்து, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .