2022 ஓகஸ்ட் 11, வியாழக்கிழமை

இலங்கை அரசை எச்சரிக்க வேண்டும்

Freelancer   / 2022 ஜூலை 05 , பி.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைப படையினர் தொடர்ந்து அத்துமீறல்களில் ஈடுபட்டு வருகின்றனர் எனக் குற்றஞ்சாட்டிய பாட்டாளி மக்கள் கட்சியின் (பா.ம.க) தலைவர் அன்புமணி ராமதாஸ், கைதான மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவையென வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் மேற்படி அத்துமீறல் விவகாரத்துக்கு இலங்கை அரசை எச்சரிக்க வேண்டும் என்றார். 

 ''வங்கக்கடலில் கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மாவட்ட மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படையினர் அத்துமீறி கைது செய்துள்ளனர். அவர்கள் இலங்கை எல்லைக்குள் நுழைந்ததாகக் கூறி காங்கேசன்துறை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது.

காரைக்காலில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 12 மீனவர்கள் கைது செய்யப்பட்டதால் ஏற்பட்ட அதிர்ச்சி விலகும் முன்பே அடுத்த கைது படலமும், அத்துமீறலும் நடந்திருக்கிறது. தமிழகத்தின் எதிர்ப்பும், கண்டனமும் இலங்கை அரசை அசைத்துக்கூட பார்க்கவில்லை என்பதையே இது காட்டுகிறது.

தமிழக மீனவர்கள் மீதான சிங்களக் கடற்படையினரின் தொடர் அத்துமீறலை மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது. மீனவர்களை கைது செய்ததற்காக இலங்கை அரசுக்கு மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கவேண்டும்; இனி கைது கூடாது என்று இலங்கை அரசை எச்சரிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். 
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .