Editorial / 2023 ஜூன் 07 , மு.ப. 09:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஷேன் செனவிரத்ன
பேராதனை, கலஹா நகரில் உள்ள பேக்கரி மற்றும் ஹோட்டலில் ஏற்பட்ட தீயில், அங்கு பணியாற்றிய ஐவர், எரிகாயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று கலஹா பொலிஸார் தெரிவித்தனர்.
பேக்கரியில் பண்டங்களை தயாரித்துக் கொண்டிருந்த போது, செவ்வாய்க்கிழமை (06) இரவு ஏற்பட்ட எரிவாயு கசிவை அடுத்து இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது என்று ஆரம்பக்கட்ட விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
அந்தத் தீயை அணைப்பதற்கு ஹோட்டல் பணியாளர்கள் முயற்சித்த போதே, அவர்கள் தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். அவர்களில் கடும் காயங்களுக்கு உள்ளான ஒருவர் கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் என்று தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .