2023 ஒக்டோபர் 03, செவ்வாய்க்கிழமை

இந்து கலைஞர்களின் விவரங்கள் திரட்டும் பணி

Freelancer   / 2023 ஏப்ரல் 04 , பி.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.ரி சகாதேவராஜா

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில், மாவட்ட செயலகம் இணைந்து, அம்பாறை மாவட்டத்திலுள்ள இந்து கலைஞர்கள் தொடர்பான விவரங்களை திரட்டும் பணி நடைபெற்று வருகின்றது.

இதன் முதலாவது கூட்டம், அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வே. ஜெகதீசன் தலைமையில் காரைதீவு சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்த மணிமண்டபத்தில் இடம்பெற்றது.

இதில் கலைஞர்களின் விவரங்கள், கலைஞர்களின் ஆக்கங்கள், கலைஞர்கள் பெற்ற விருதுகள் தொடர்பான விவரங்கள், சமூகத்தில் கலைஞர்களின் பங்களிப்பு போன்ற பல விடயங்கள் ஆராயப்பட்டன.

இதில் மாவட்ட இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் கு. ஜெயராஜி, சம்மாந்துறை இந்து கலாசார உத்தியோகத்தர் திருமதி கெளசல்யவாணி, காரைதீவு இந்து கலாசார உத்தியோகத்தர் திருமதி சி. சிவலோஜினி, கல்முனை வடக்கு இந்து கலாசார உத்தியோகத்தர் திருமதி க. சுஜித்திரா, நிந்தவூர் கலாசார உத்தியோகத்தர் திருமதி பா. சுஜிவனி, உட்பட காரைதீவு, கல்முனை வடக்கு,
சம்மாந்துறை கலஞர்கள் கலந்து கொண்டனர். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .