2023 ஜூன் 01, வியாழக்கிழமை

குளவி கொட்டியதில் தந்தை ம​ரணம்

Freelancer   / 2023 மார்ச் 31 , பி.ப. 12:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ, ஆ.ரமேஸ்.

தேயிலைத் தோட்டத்தில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த போது, குளவிகள் கலைந்து கொட்டியதில். கடுமையான பாதிப்புக்கு உள்ளான மூவர் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதில், லிந்துல பாம் தோட்டத்தைச் சேர்ந்த 72 வயதானவ​​ர் மரணமடைந்துள்ளார். இவர் ஐந்து பிள்ளைகளின் தந்தையாவார்.

இன்று (31) காலை 10 மணியளவிலேயே குளவி கொட்டியுள்ளது என லிந்துல பொலிஸார் தெரிவித்தனர்.

ஏனைய இருவரும் லிந்துலை வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .