2022 ஓகஸ்ட் 17, புதன்கிழமை

மகளை துஷ்பிரயோகபடுத்த முயற்சித்த தந்தை கைது

R.Maheshwary   / 2021 நவம்பர் 28 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராமு தனராஜா

பசறை - பொல்காலந்த பகுதியில் 13 வயது சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயன்ற, சிறுமியின் தந்தை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

குறித்த சிறுமியின் தாயார், வெளிநாட்டில் பணிபுரியும் நிலையில், சிறுமி தகப்பனாருடன் தனிமையில் வாழ்ந்து வரும் வருவதாகவும் இதன்போதே, சந்தேகநபரான தந்தை  சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்க முயன்றுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில், பாதிக்கப்பட்ட  சிறுமி தனது உறவுக்கார மாமியிடம்  கூறியதைத் தொடர்ந்து, உறவுக்கார பெண்மணியினூடாக சிறுமி வேறொரு வீடொன்றில் தங்கவைக்கப்பட்டப் பின்னர், பசறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை செய்துள்ளார். 

விசாரணைகளை மேற்கொண்ட பசறை பொலிஸார், சிறுமியை வெளிமடை சிறுவர் இல்லத்தில் ஒப்படைத்துள்ளதுடன், சந்தேகநபரான தந்தையை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியதையடுத்து, சந்தேகநபரை அடுத்த மாதம் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .