2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

வீடு சேதமடைத்தோருக்கு நிவாரணம்

Princiya Dixci   / 2021 செப்டெம்பர் 28 , பி.ப. 01:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


நூருல் ஹுதா உமர்

கடந்த ஜூன், ஜூலை  மாதங்களில் கடும் காற்றுக் காரணமாக வீடு சேதமடைந்த 10 பயனாளிகளுக்கான தலா ரூபாய் 10,000 முதற்கட்ட காசோலை, காரைதீவு பிரதேச செயலகத்தில் வைத்து பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜன் தலைமையில் இன்று (28) வழங்கப்பட்டது.

அனர்த்த நிவாரண சேவை அமைச்சால் இதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில், கணக்காளர் என்.ஜய சர்மிகா மற்றும் அனர்த்த நிவாரண சேவை உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டு பயனாளிகளுக்கான காசோலைகளை வழங்கினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X