Editorial / 2022 ஜூன் 28 , பி.ப. 08:16 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஒரே நிறுவனத்தில் பணியாற்றாமல் விரும்பிய பணியை, விரும்பிய நேரத்தில் செய்து கொள்ளும் கிக் பொருளாதாரத்தில் ( கிக் எகானமி) இந்தியாவில் தற்போது 77 இலட்சம் மக்களைப் பணியாற்றுவதாகவும் 2029-30 ஆம் ஆண்டில் இது 2.35 கோடியாக அதிகரிக்கும் என நிதி ஆயோக் மதிப்பிட்டுள்ளது.
கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு உலகெங்கிலும் கிக் பொருளாதாரம், கிக் வேலை முறை பெரியளவில் பரவ ஆரம்பித்து இருக்கிறது. தாங்கள் விரும்பிய நேரத்தில் விரும்பிய பணியை, விரும்பிய நேரத்தில் செய்து கொள்ளும் இந்தமுறை கிக் என அழைக்கப்படுகிறது. குறைவான நேரத்தில் சரியான வருவாய் ஈட்ட முடிவதால் உலகம் முழுவதும் தொழிலாளர் வர்க்கம் இதனை நோக்கி ஆசையுடன் நகர்ந்து வருகிறது.
கட்டுப்பாடுகள் ஏதுமின்றி சுயமாக வேலைசெய்ய விரும்புபவர்களும், ஒரு குறிப்பிட்ட வேலையைத் திறம்பட செய்துமுடிக்கும் ஒருவருக்கு அதற்கு மட்டும் ஊதியம் தந்தால் போதுமானது என்று நிறுவனங்களும் எண்ணத் தொடங்கியதன் விளைவே இந்த கிக் எகானமி உருவானது. இதை ஃப்ரீலான்ஸ் எகானமி (Freelance Economy) என்றும் அழைக்கிறார்கள்.
45 minute ago
57 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
57 minute ago
1 hours ago