2021 செப்டெம்பர் 22, புதன்கிழமை

‘சுனக ராஜா’ க்கு சிலை வைத்த எஜமான்

Editorial   / 2021 ஜூலை 26 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆந்திரா

ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம், பாபுலபாடு மண்டலத்தில் உள்ள அம்பாபுரத்தை சேர்ந்த விவசாயி ஞானபிரகாஷ் ராவ்.

இவர் சில ஆண்டுகளாக ‘சுனக ராஜா’ எனும் நாயை பாசத்துடன் வளர்த்தார்.

அந்த நாயும் இவர்களின் குடும்பத்தாரோடு மிகவும் அன்பாகவும், பாசமாகவும் பழகி வந்தது. இதனிடையே ஞானபிரகாஷ் தனது 2 மகள்களுக்கு திருமணமும் செய்து மாமியார் வீடுகளுக்கு அனுப்பி வைத்தார்.

மனைவியும் ஏற்கனவே இறந்து விட்டதால், வீட்டில் ஞானபிரகாஷுக்கு துணையாக ‘சுனக ராஜா’ மட்டுமே இருந்தது.

அது கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் உடல் நலம் சரியின்றி இறந்து விட்டது. அதிலிருந்து அந்த நாயின் நினைவு நாளை ஞான பிரகாஷ் மிகவும் தடபுடலாக அனுசரித்து வருகிறார்.

அந்த நாயின் 5 ஆம் ஆண்டு நினைவு நாள் நேற்றாகும். இதேபோல் தடபுடலாக அனுசரிக்கப்பட்டது. கிராமத்தின் பல இடங்களில் நாய்க்கு பெனர்கள் வைக்கப்பட்டன.

‘குடும்பத்தில் ஒருவனாக பழகிய சுனகராஜாவின் ஆன்மா சாந்தி அடைய வேண்டும்” என அந்த பேனரில் எழுதப்பட்டு படத்துடன் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்தது. இதனை பார்த்த பலர் ஆச்சரியப்பட்டனர்.

பின்னர், 5ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, அந்த நாய்க்கு தனது வீட்டில் வெண்கல சிலையையே வைத்து மாலை போட்டு, அதற்கு பிடித்தமான உணவுகளை படைத்து அனுசரித்தார் ஞானபிரகாஷ். மேலும், அந்த ஊர்க்காரர்களை வீட்டுக்கு அழைத்து விருந்தும் படைத்து மகிழ்ச்சி அடைந்தார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .