2022 ஜனவரி 25, செவ்வாய்க்கிழமை

டிக்கெட் வாங்கி பஸ்ஸில் பயணித்த கோழி

Editorial   / 2021 டிசெம்பர் 01 , பி.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

கோழிக்கும் டிக்கெட் வாங்கி பயணிக்கும் நிலை அரசு பஸ்ஸில் விவசாயி ஒருவருக்கு ஏற்பட்டது.

கொப்பாலை சேர்ந்தவர் ராமப்பா, 45. விவசாயியான இவர், கடந்த 28இல் ஹைதராபாத்தில் இருந்து கொப்பால் கங்காவதிக்கு அரசு பஸ்சில் கோழியுடன் பயணித்தார். அப்போது டிரைவர், 'கோழிக்கும் அரை டிக்கெட் வாங்க வேண்டும்' என, கூறியுள்ளார்.அதன்படி, 463 ரூபாய் கொடுத்து கோழிக்கும் தனியாக டிக்கெட் பெற்று பயணித்தார்.

ஒரு கோழியின் விலையை 300 ரூபாய் முதல் 400 ரூபாய்வரை மட்டுமே இருக்கும். ஆனால் 463 ரூபாய் கொடுத்து பயணித்துள்ள இந்த கோழி, சமூக வலைதளங்களிலும் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து நடத்துனர் அனிஷ்  இது வழக்கமாக உள்ள நடைமுறைதான் என்று கூறினார்.  

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X