2022 ஓகஸ்ட் 11, வியாழக்கிழமை

ஒரே வாரத்தில் நால்வர் தற்கொலை

R.Maheshwary   / 2022 ஜூன் 27 , பி.ப. 12:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமணசிறி குணதிலக

மொனராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் நால்வர் தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளனர் என,  மொனராகலை வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்துள்ளன.

இதற்கமைய மொனராகலை- ஹிந்திகிவுல பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதான பாடசாலை மாணவியொருவரும் தொம்பகஹவெல பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதான இளைஞர் ஒருவரும் தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளனர்.

அத்துடன் பீல்லவெல பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயது நபர் ஒருவரும் கல்வெலபார பகுதியைச் சேர்ந்த 22 வயதான ஒரு பிள்ளையின் தாய் ஒருவரும் தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடும்ப பிரச்சினை, காதல் தொடர்பு, பொருளாதார பிரச்சினைகள் காரணமாகவே இவர்கள், தம்முயிரை மாய்த்துக்கொண்டுள்ளமை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

 

 

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .