2021 ஒக்டோபர் 28, வியாழக்கிழமை

யாழில் விபத்து; ஒருவர் பலி

Freelancer   / 2021 செப்டெம்பர் 18 , பி.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்.கோப்பாய் - இராசபாதை வீதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கை மின்சார சபைக்குச் சொந்தமான வாகனம் ஒன்று முச்சக்கர வண்டியை மதிலோடு சேர்த்து மோதித் தள்ளியுள்ளதில் இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

ஆலயத்திற்குச் சென்றுவிட்டு கோப்பாய் நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியை, எதிரே வந்த இலங்கை மின்சார சபைக்குச் சொந்தமான வாகனம் மதிலோடு சேர்த்து மோதித் தள்ளியுள்ளது.

இதில், அப்பகுதியில் குழாய்க்கிணறு உருவாக்கும் தொழில் மேற்கொண்டுவரும் குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.

விபத்தை ஏற்படுத்திய இலங்கை மின்சாரசபைக்குச் சொந்தமான வாகனத்தையும் விபத்திற்குள்ளான முச்சக்கர வண்டியையும் பொலிஸ் நிலையத்துக்கு எடுத்து சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .