2023 செப்டெம்பர் 27, புதன்கிழமை

பொலிஸ் ஜீப் வண்டி மீது கல்வீச்சு

Freelancer   / 2023 ஜூன் 10 , பி.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

காசிப்பு உற்பத்தி செய்யும் இடம் ஒன்றை சோதனையிட சென்ற பொலிஸ் ஜீப் வண்டி மீது கற்களை வீசி தாக்குதல் நடத்திய மூவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

டயகம கிழக்குத் தோட்டத்தின் மூன்றாம் பிரிவில், காசிப்புடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மற்றும் கசிப்பு காய்ச்சுவதற்குப் பயன்படுத்திய உபகரணங்களை அழைத்துச் செல்லும் போது, டயகம காவற்துறையினரின் ஜீப் மீது கற்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மேலும் இதில் கைது செய்யப்பட்டவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த 35, 22 மற்றும் 25 வயதுடையவர்களாவர். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .