Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Maheshwary / 2022 ஜூன் 30 , மு.ப. 09:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
சேஹ்ன் செனவிரத்ன
பெண்கள் கர்ப்பமடையும் முதலாவது சந்தர்ப்பத்தில் எச்.ஐ.வி மற்றும் வி.டி.ஆர்.எல் போன்ற பரிசோதனைகள் கட்டாயமாக செய்யப்பட வேண்டிய நிலையில், நாட்டில் ஏற்பட்டுள்ள மருத்துவ உபகரணங்களுக்கான தட்டுபாடு, மருந்து தட்டுபாடு காரணமாக குறித்த பரிசோதனைகளை முன்னெடுப்பதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக தாயிடமிருந்து சேய்க்கு தொற்றும் சில நோய்களை தடுக்கும் சில வேலைத்திட்டங்கள் தற்போது முழுமையாக செயலிழந்துள்ளது என இலங்கை வைத்தியர்களின் சங்கத்தின் பிரதி தலைவரும் ஊடகப் பேச்சாளருமான வைத்தியர் சிதான் ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் பெண்கள் பாலியல் தொழில்களில் ஈடுபடுவது அதிகரித்துள்ளதாகவும் இதனால் குறித்த எச்.ஐ.வி பரிசோதனையானது, கர்ப்பிணிகளுக்கு மாத்திரமல்லாது எச்.ஐ.வி தொற்று ஏற்படும் என சந்தேகிக்கப்படும் அனைவரும் கட்டாயம் செய்ய வேண்டிய பரிசோதனையாகும்.
குறித்த பரிசோதனையானது, கருவுற்றதிலிருந்து 14 வாரங்கள் செல்வதற்கிடையில் செய்யப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே தற்போதைய டொலர் பிரச்சினையால் இந்த பரிசோதனையை முன்னெடுப்பதற்கான வாய்ப்பு குறைந்துள்ளதாகவம் இதனால் பிறக்கும் குழந்தை எச்.ஐ.வி தொற்றுடன் பிறந்தால் அதற்காக பாரிய நிதியை செலவிட நேரிடும் என்றும் எச்சரித்துள்ளார்.
எச்.ஐ.வி தொற்றானது தாயிடமிருந்து சிசுவுக்கு தொற்றுவதை முற்றாக ஒழிக்கும் நாடாக இலங்கை 2018ஆம் ஆண்டு உலக சுகாதார ஸ்தாபனத்தினால் பெயரிடப்பட்டுள்ளது.
அதேப்போல் 2025ஆம் ஆண்டளவில் எச்.ஐ.வி தொற்றை முற்றாக ஒழித்த நாடாக இலங்கையை மாற்றும் இலக்கானது, நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்து தட்டுபாடால் இல்லாமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்றார்.
14 minute ago
20 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
20 minute ago
3 hours ago