2021 ஒக்டோபர் 21, வியாழக்கிழமை

’சி.வி : மலையகத்தின் ஒளிரும் மூர்த்திகரம்’

R.Maheshwary   / 2021 செப்டெம்பர் 13 , பி.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.கிருஸ்ணா

மக்கள் கவிமணி சி. வி. வேலுப்பிள்ளையின் 107 ஆவது பிறந்த தினத்தை நினைவுகூரும் வகையில், நாளை  (14) 'நினைவுப் பேருரை' ஆற்றும்  நிகழ்வு இணைய வழியில் இடம்பெறவுள்ளது.  

சாகித்ய ரத்னா தெளிவத்தை ஜோசப் தலைமையில் இடம்பெறும், இந்த நிகழ்வில், 'சி.வி: மலையகத்தின் ஒளிரும் மூர்த்திகரம் ' எனும் தலைப்பில் இலக்கிய ஆய்வாளர் மு.நித்தியானந்தன் நினைவேந்தல் உரையாற்றவுள்ளார். 

பதுளை, மடுல்சீமையைச் சேர்ந்த இளம் ஆய்வாளர் புளோரிடா சிமியோன், 'மலையக வாழ்வியலில் பெண்கள், சிறுவர்களின்  வகிபாகமும்,  அவர்கள் எதிர்நோக்கும் சவால்களும்' எனும் தலைப்பில் நினைவுப் பேருரை ஆற்றவுள்ளார். 

நினைவுப்பேருரை குறித்த கருத்துரையை மலையகக் கல்வியாளர் எம். வாமதேவன் வழங்கவுள்ளார்.

நிகழ்ச்சிகளை ஒருங்கமைக்கும் பாக்யா பதிப்பகம் சார்பில் அதன் நிறுவுனர் மல்லியப்புசந்தி திலகர் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தவுள்ளார். 

உரைகளைத் தொடர்ந்து உரையாடல்களும் zoom  செயலி ஊடாக நாளை 14  மாலை 7 மணிக்கு (இலங்கை நேரம்)  இடம்பெறும் இந்த நிகழ்வின் நுழைவு விபரம்  Meeting ID: 815 9882 3709 Passcode: 495887 என்பதாகும்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X