Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2022 ஜூலை 05 , மு.ப. 03:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒற்றை தலைமை என்ற இலக்கை நோக்கி அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் (அ.தி.மு.க..) பயணிக்க தொடங்கியுள்ளது. கடந்த ஜூன் 23 ஆம் திகதி நடைபெற்ற அ.தி.மு.க பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் ஒற்றை தலைமை தொடர்பாக எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை.
எனினும், எடப்பாடி பழனிசாமிதான் கட்சியின் பொதுச்செயலாளர் என அறுதியிட்டு காட்டியுள்ளது.
இந்நிலையில், பொதுக்குழு ஜூலை 11ம் திகதி நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் அழைப்பிதழ் சென்று சேர்ந்துள்ளது. சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டத்தில் பொதுக்குழுவை நடத்த ஏற்பாடுகள் தயாராகி வருகின்றன.
இந்நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக பதிவாகி வருகிறது. கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஆன்லைன் (நிகழ்நிலை) மூலமும் பொதுக்குழுவை நடத்த மாற்ற திட்டத்தையும் தலைமைக் கழக நிர்வாகிகள் மேற்கொண்டுள்ளனர்.
இது தொடர்பாக பொதுக்குழு உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் நேரடியாக நடத்தவே திட்டமிட்டுள்ள நிலையில், கொரோனாவை காரணம் காட்டி அரசு அனுமதி வழங்காதபட்சத்தில் இந்த மாற்று திட்டத்தை பயன்படுத்தவும் தலைமை கழக நிர்வாகிகள் முடிவெடுத்துள்ளனர். தமிழகத்தில் தினசரி கொரோனா தொற்று 2500ஐ கடந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
14 Jul 2025
14 Jul 2025