2021 ஜூலை 27, செவ்வாய்க்கிழமை

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்துக்கு விசேட விருது

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 07 , மு.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)

தொழில் உறவுகள் மற்றும் அபிவிருத்தி மேம்பாட்டு அமைச்சின் உற்பத்தித் திணைக்களம் ஒழுங்கு செய்திருந்த தேசிய உற்பத்தி திறன் சம்பந்தமான போட்டியில் கிழக்கு மாகாண மட்டத்தில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்துக்கு விசேட விருது கிடைத்துள்ளது.

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஸகீலா இஸ்ஸதீனின் வழிகாட்டலின் கீழ் அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசத்திலிருந்து கலந்து கொண்ட ஒரேயொரு திணைக்களம் இதுவேயாகும்.

கிழக்கு மாகாணத்திலுள்ள மூன்று மாவட்டங்களிலும் திருகோணமலை மாவட்டத்திற்கு 2 விருதுகளும்  மட்டக்களப்பு மாவட்டத்திற்கு ஒரு விருதும் அம்பாறை மாவட்டத்திற்கு 26 விருதுகளும் கிடைத்தன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .