2021 செப்டெம்பர் 29, புதன்கிழமை

அமைச்சர் விமல் வீரவஸ அம்பாறைக்கு விஜயம்

Super User   / 2010 ஒக்டோபர் 25 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சி.அன்சார்)

வீடமைப்பு நிர்மானத்துறை அமைச்சர் விமல் வீரவன்ச இன்று திங்கட்கிழமை அம்பாறைக்கு விஜயம் செய்தார்.

காலை 9.30 மணிக்கு அம்பாறை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற அம்பாறை மாவட்ட  வீடமைப்பு அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலில் கலந்து கொண்டார்.

இதில் அமைச்சர் பீ.தயாரத்ன, திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர, கிழக்கு மாகாண வீடமைப்பு அமைச்சர் எம்.எஸ்.எம். உதுமாலெவ்வை, கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள், பிரதேச செயலாளரகள், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இம்மாவட்டத்தில் யுத்தம்,சுனாமி அனர்த்தம் ஆகியவற்றினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீடமைப்பு சம்பந்தமாக இங்கு ஆராய்யப்பட்டது.

 

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .