Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
A.P.Mathan / 2010 நவம்பர் 03 , மு.ப. 07:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.மாறன்)
அக்கரைப்பற்று ஊர்போடியார் வீதியில் மர்ம வெடிபொருள் ஒன்று இன்று காலை 10 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது.
ஊர்போடியார் வீதியில் வீடுகட்டுவதற்காக அத்திபாரம் தோன்றிய போது மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருளொன்றை பொதுமக்கள் கண்டெடுத்துள்ளனர். பொலிஸாருக்கும் விசேட அதிரடிப்படையினருக்கும் தகவல் தெரிவித்ததனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த விசேட அதிரடிப்படையின் குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினர் அந்த மர்ம வெடிகுண்டு தொடர்பாக ஆராய்ந்து வருகின்றனர்.
பிளாஸ்டிக்கினாலான அந்த மர்ம வெடிபொருள் எந்த ரகத்தினை சார்ந்தது என்பது தொடர்பாக குண்டு செயலிழக்கும் பிரிவினர் ஆராய்ச்சியினை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago