2021 செப்டெம்பர் 29, புதன்கிழமை

சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வு

Kogilavani   / 2011 ஏப்ரல் 08 , மு.ப. 08:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

பொகவந்தலாவை மஹாவெலி காட்டில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுப்படுவதனால் தாம் பல அசௌகரியங்களை எதிர்கொள்வதாக அப்பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இப் பிரதேசத்தில் சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபடும்போது காசல்ரீ நீர்த்தேக்கத்தில் சேற்று நீர் நிரம்பி விடுவதால் மின்சார உற்பத்தி நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அதேவேளை காசல்ரீ மற்றும் மவுசாகலை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் குறைந்து வருவதால் இந் நீர்த்தேக்கங்களை அண்டிய பகுதிகளிலும் அண்மைக்காலமாக சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழும் நடவடிக்கைள் ஈடுப்பட்டு வருகின்றனர்.
எனவே,  இவ்விடயம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள்  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .