Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2023 ஜூன் 09, வெள்ளிக்கிழமை
Ilango Bharathy / 2023 மார்ச் 21 , பி.ப. 04:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒடிசா மாநிலம், ரயஹடா மாவட்டம் பருதிபேடு கிராமத்தை சேர்ந்தவர் நரேஷ். இவருக்கும் அதே மாவட்டத்தை சேர்ந்த டிபல்படு கிராமத்தை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் கடந்த 17 ஆம் திகதி திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
இந்நிலையில் இருமணத்தன்று திருமணத்திற்காக 28 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள மணமகளின் வீட்டிற்கு செல்ல நரேஷின் குடும்பத்தினர் புறப்பட்டனர். இதற்காக 2 வேன்களை வாடகைக்கு ஒழுங்கு செய்துள்ளனர்.
எனினும் அன்றைய தினம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒடிசா முழுவதும் வாடகை கார், வேன் சாரதிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நரேஷ் தனது திருமணத்திற்குச் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
எனினும் மனம் தளராத நரேஷ் மணமகளின் வீட்டிற்கு நடந்தே செல்ல முடிவு செய்தார்.
இதனையடுத்து அவர குடும்ப உறுப்பினர்கள் 30 பேருடன் கடந்த வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு தனது பயணத்தைத் தொடங்கிய நரேஷ், 28 கிலோமீற்றர் நடந்து சென்று வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணிக்கு மணமகளின் வீட்டை வெற்றிகரமாக அடைந்தார்.
இதனையடுத்து வெள்ளிக்கிழமை காலை நரேஷுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
18 minute ago
25 minute ago
39 minute ago