2023 ஜூன் 07, புதன்கிழமை

50 மில்லியன் ரூபாய் நெல் கொள்வனவு

Freelancer   / 2023 மார்ச் 27 , மு.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ. கீதாஞ்சன்

புதுக்குடியிருப்பு பிரதேச விவசாயிகளிடம் கிலோ 100 ரூபாய் படி, 81 மில்லியன் ரூபாய்க்கு நெல்லைக் கொள்வனவு செய்துள்ளதாக புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் எஸ். ஜெயகாந் தெரிவித்துள்ளார்.

வறிய மக்களுக்கு அரிசி வழங்கும் திட்டம் நேற்று (26) உடையார் கட்டில் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்;  
உணவு இல்லாதவர்களுக்கு உணவு கிடைக்கவழி ஏற்படுத்தும் திட்டமாக வறிய மக்களுக்கு அரிசி வழங்கம் திட்டம் அமைந்துள்ளது. 

அத்துடன், விவசாயம் சார்ந்த பகுதியான முல்லைத்தீவு மாவட்ட விவசாயிகள் தரமான விலையில் நெல்லைச் சந்தைப்படுத்துவதற்கு ஏற்ற வகையில் இந்தத் திட்டம் அமைந்துள்ளது.

நெல்லை விவசாயிகளிடம் இருந்து கிலோ கிராம் 100 ரூபாய் விலையில் கொள்வனவு செய்து, மாவட்டத்தில் உள்ள அரிசி ஆலைகளில் அரிசியாக்கி எங்கள் பகுதி மக்களுக்கே அதனை கிடைக்கச்செய்வது பல நல்ல அனுகூலங்களை தருகின்றது.

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் 81 மில்லியன் ரூபாய்க்கு நெல்லைக் கொள்வனவு செய்துள்ளோம். 31 மில்லியன் ரூபாய் பெறுமதியான நெல் புதுக்குடியிருப் பிரதேசத்தில் வறுமைக்கு உட்பட்ட மக்களுக்கு வழங்குவதற்கும் 50 மில்லியன் ரூபாய் பெறுமதியான நெல், யாழ்ப்பாண மாவட்டத்துக்க வழங்கி வருகின்றோம். இந்த திட்டத்தில் பெருமளவு நன்மையடையும் பகுதியாக முல்லைத்தீவு மாவட்டத்தின் விவசாய பகுதி அமைந்துள்ளது என்றும் தெரிவித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .