2023 ஒக்டோபர் 01, ஞாயிற்றுக்கிழமை

நாப்போலியில் கட்டுஸோவைப் பிரதியிடும் ஸ்பலெட்டி

Shanmugan Murugavel   / 2021 மே 29 , பி.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

இத்தாலிய சீரி ஏ கால்பந்தாட்டக் கழகமான நாப்போலியின் முகாமையாளராக ஜெனாரோ கட்டுஸோவை, இன்னொரு இத்தாலிய சீரி ஏ கழகமான இன்டர் மிலனின் முன்னாள் முகாமையாளர் லூசியானோ ஸ்பலெட்டி பிரதியிடுகின்றார்.

இன்டர் மிலனிலிருந்து கடந்த 2019ஆம் ஆண்டு நீக்கப்பட்ட பின்னர் தற்போதே முகாமைத்துவத்துக்கு ஸ்பலெட்டி திரும்புகின்றாரென்பது குறிப்பிடதக்கது.

கட்டுஸோ, இன்னொரு சீரி ஏ கழகமான பியொரென்டினாவின் முகாமையாளராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இன்னொரு இத்தாலிய சீரி ஏ கழகமான ஜுவென்டஸின் முகாமையாளரான அன்ட்ரியா பியர்லோவை, அக்கழகம் தமது முன்னாள் முகாமையாளர் மஸிமிலியானோ அல்லெகிரியால் கடந்த வெள்ளிக்கிழமை பிரதியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .