2021 செப்டெம்பர் 22, புதன்கிழமை

இங்கிலாந்து எதிர் பாகிஸ்தான்: ODI தொடர் நாளை ஆரம்பிக்கிறது

Shanmugan Murugavel   / 2021 ஜூலை 07 , பி.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரானது கார்டிஃப்பில், இலங்கை நேரப்படி நாளை மாலை 5.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கிறது.

இத்தொடருக்காக இலங்கைக்கு எதிரான தொடரில் பங்கேற்ற அதே குழாமையே இங்கிலாந்து அறிவித்திருந்த நிலையில், வீரர்கள் நால்வருக்கும், பயிற்சியாளர்கள் மூவருக்கும் கொரோனாத் தொற்று ஏற்பட்ட நிலையில் அக்குழாம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

அந்தவகையில், பென் ஸ்டோக்ஸ் தலைமையில் புதுமுகவீரர்களைக் கொண்ட புதிய குழாம் ஒன்றை இங்கிலாந்து அறிவித்த நிலையில், பாகிஸ்தானுக்கு அதிக வாய்ப்புகள் உள்ள தொடராக இத்தொடர் காணப்படுகின்றது.

இந்நிலையில், ஸக் குறொலி, பென் டக்கெட், டொம் ஹெல்ம், டான் லோரன்ஸ், ஜேம்ஸ் வின்ஸ், ஜேக் போல், லூயிஸ் கிரேகரி, சகிப் மஹ்மூட், டேவிட் மலன், கிரேய்க் ஒவெர்ட்டன், மற் பார்க்கின்ஸன், பில் ஸோல்ட் ஆகியோருக்கு பிரகாசிப்பதற்கு இத்தொடர் வாய்ப்பை வழங்குகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .