2021 செப்டெம்பர் 22, புதன்கிழமை

மோசடியால் இலங்கையணியின் ஆய்வாளருக்கு தடை

Shanmugan Murugavel   / 2021 ஜூலை 05 , பி.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கிரிக்கெட் சபையின் முன்னாள் பெறுபேற்று ஆய்வாளர் சனத் ஜயசுந்தரவை சர்வதேச கிரிக்கெட் சபையின் மோசடிக்கு எதிரான தீர்ப்பாயம், அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்து ஏழு ஆண்டுகளுக்கு தடை செய்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட் சபையின் மோசடிக்கு எதிரான கோவையை மீறியதில் குற்றமுள்ளவராக ஜயசுந்தர கண்டுபிடிக்கப்பட்டதையடுத்தே  இத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் விளையாட்டமைச்சர் ஹரின் பெர்ணான்டோவுக்கு இலஞ்சம் வழங்குவதன் மூலம் சர்வதேசப் போட்டி ஒன்றின் முடிவை, போக்கை, நடப்பை அல்லது எந்தவொரு விடயத்தையோ முறையற்ற விதத்தில் தாக்கம் செலுத்த கடந்த 2019ஆம் ஆண்டு ஜயசுந்சுர முயன்றிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .