2021 ஒக்டோபர் 23, சனிக்கிழமை

’மீதமுள்ள போட்டிகளை நடத்த முடியுமா?’

Freelancer   / 2021 ஜூலை 27 , பி.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியின் மீதமுள்ள இரண்டு போட்டிகளை நடத்த முடியுமா, இல்லையா என்பது குறித்த தீர்மானம், நாளை (28) காலை கிடைக்கவுள்ள இந்திய வீரர்களின் பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளைப் பொறுத்தே எடுக்கப்படும் என்று இலங்கை கிரிக்கெட்டின் மூத்த அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இந்திய அணியில் உள்ள அனைத்து வீரர்களும் கொரோனா தொற்றுக்குள்ளான வீரருடன் தொடர்பு கொண்டிருந்ததால், அனைத்து வீரர்களும் பி.சி.ஆர் பரிசோதனைக்காக மீண்டும் பரிந்துரைக்கப்பட்டதாகத் தெரிவித்த அவர், பி.சி.ஆர் முடிவுகள் இன்னும் தீர்க்கமானவை என்றும் குறிப்பிட்டார். 

இந்திய கிரிக்கெட் வீரர் குருனால் பாண்டியா, கொரோனா தொற்றுக்குள்ளானதால், இன்று (27) நடைபெறவிருந்த இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .