2021 நவம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

ஸ்பெய்னை வென்று சம்பியனான பிரான்ஸ்

Shanmugan Murugavel   / 2021 ஒக்டோபர் 11 , மு.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் தேசங்களுக்கான லீக் தொடரில் பிரான்ஸ் சம்பியனானது.

இத்தாலியில் இன்று அதிகாலை நடைபெற்ற ஸ்பெய்னுடனான இறுதிப் போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் வென்றே பிரான்ஸ் சம்பியனாயிருந்தது.

பிரான்ஸ் சார்பாக, கரிம் பென்ஸீமா, கிலியான் மப்பே ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, ஸ்பெய்ன் சார்பாகப் பெறப்பட்ட கோலை மிகேல் ஒயர்ஸ்பல் பெற்றிருந்தார்.

இதேவேளை, பெல்ஜியத்தை 2-1 என்ற கோல் கணக்கில் வென்ற இத்தாலி மூன்றாமிடத்தைப் பெற்றிருந்தது. இத்தாலி சார்பாக, நிக்கொலோ பரெல்லா, டொமெனிக்கோ பெரார்டி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, பெல்ஜியம் சார்பாகப் பெறப்பட்ட கோலை சார்ள்ஸ் டி கெடெலரே பெற்றிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .