2023 பெப்ரவரி 07, செவ்வாய்க்கிழமை

சாமிக்கவுக்கு ஒரு வருட தடை

Freelancer   / 2022 நவம்பர் 23 , பி.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கிரிக்கெட் வீரர் சாமிக்க கருணாரத்னவுக்கு அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் பங்குபற்றுவதற்கு ஒரு வருட ஒத்திவைக்கப்பட்ட தடையை விதித்துள்ள ஸ்ரீலங்கா கிரிக்கெட் அவருக்கு 5 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் அபராதமும் விதித்துள்ளது.

அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற இருபதுக்கு 20 உலகக் கிண்ணப் போட்டியின் போது வீரர்கள் ஒப்பந்தத்தில் பல விதிகளை மீறியமை தொடர்பில் 3 பேர் கொண்ட விசாரணைக் குழுவினால் ஒழுக்காற்று விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

அதன்போது, சாமிக்க கருணாரத்ன தமக்கு எதிராக சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X