2023 பெப்ரவரி 07, செவ்வாய்க்கிழமை

இலங்கையை வந்தடைந்த ஆப்கானிஸ்தான் அணி

R.Maheshwary   / 2022 நவம்பர் 22 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.கே.ஜி.கபில

இலங்கையில் நடைபெறவுள்ள ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்வதற்காக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியினர்  இன்று (22)  காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

28 வீரர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இரண்டு குழுக்களாக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையவுள்ள நிலையில்,  14 பேர் கொண்ட முதல் குழு டுபாயிலிருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானமான EK-650 இல் இன்று  08:30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

ஆப்கானிஸ்தான் கிரிக்கட் அணி எதிர்வரும் 25, 27 மற்றும் 30 ஆம் திகதிகளில் கண்டி பல்லேகல மைதானத்தில் நடைபெறவுள்ள 03 ஒரு நாள் மட்டுப்படுத்தப்பட்ட 50 ஓவர்கள் கொண்ட போட்டிகளில் பங்கேற்கவுள்ளது.

  இந்த குழுவினரை வரவேற்க இலங்கை கிரிக்கெட் அதிகாரிகள் குழுவொன்று கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்ததுடன், கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளின் கீழ் விமான நிலையத்திலிருந்து அழைத்துச் செல்லப்பட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X