2023 ஜூன் 02, வெள்ளிக்கிழமை

இன்று ஆரம்பிக்கிறது ஐ.பி.எல்

Shanmugan Murugavel   / 2023 மார்ச் 31 , பி.ப. 02:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான இந்தியன் பிறீமியர் லீக்கானது (ஐ.பி.எல்), அஹமதாபாத்தில் இன்றிரவு 7.30 மணிக்கு சென்னை சுப்பர் கிங்ஸை நடப்புச் சம்பியன்கள் குஜராத் டைட்டன்ஸ் எதிர்கொள்ளும் போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.

முன்னெப்போதுமில்லாத வகையில் 10 அணிகளின் பங்கேற்புடன் இந்த 16ஆவது பருவகாலமானது, அந்தந்த அணிகளின் சொந்த மைதானம், எதிரணியின் மைதானம் என்றவாறு முதன்முறையாக நடைபெறவுள்ளது.

தவிர, நாணயச் சுழற்சிக்குப் பின்னர் அணியை அறிவிப்பது, தாக்கம் செலுத்தக்கூடிய வீரரை போட்டியின் எப்போதாவது பிரதியிடல், நோ போல், வைட்களுக்கு மீள் பரிசீலனை செய்யக்கூடிய வசதி என பல விறுவிறுப்பான மாற்றங்களுடன் ஐ.பி.எல் இம்முறை களம் காண்கிறது.

இலங்கையைப் பொறுத்தவரையில் பானுக ராஜபக்‌ஷ, வனிடு ஹஸரங்க, மதீஷ பத்திரண, மகேஷ் தீக்ஷன ஆகியோர் ஐ.பி.எல்லில் களம் காண்பதுடன், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விஜயகாந்த் வியாஸ்காந்த் வலைப்பந்துவீச்சாளராகக் காணப்படுகிறார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .