Super User / 2011 மார்ச் 26 , மு.ப. 09:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர்வரும் ஏப்ரல் 2 ஆம் திகதி மும்பையில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதிப்போட்டிக்கான பாதுகாப்பு தொடர்பாக இந்தியாவின் தேசிய பாதுகாப்பு படை, விமானப்படை, கடற்படை, இராணுவம் ஆகியவற்றுடன் மும்பை பொலிஸார் கலந்துரையாடல்களை நடத்தி வருகின்றனர். 
கடந்த வருடம் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா இந்தியாவுக்கு விஜயம் செய்தபோது மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளைவிட இருமடங்கு இறுக்கமான பாதுகாப்பு ஏற்பாடுகள் உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதிப்போட்டியின் போது மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
உலகக்கிண்ண போட்டிகளின்போது பயங்கரவாத தாக்குதல் நடைபெறலாம் என புலனாய்வு அமைப்புகள் எச்சரித்துள்ளமையே இதற்கான காரணமாகும். வான் மற்றும் கடல்வழியாக தாக்குதல் நடைபெறக்கூடிய வாய்ப்புகளை மும்பை பொலிஸார் நிராகரிக்கவில்லை.
இறுதிப்போட்டி நடைபெறவுள்ள மும்பை வாங்கெட் அரங்கு ஏற்கெனவே விமானப்பறப்பு தடை வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
உத்தரவை மீறி பறக்கும் எந்த வான்கலத்தையும் சுட்டுத்தள்ளுவதற்கு இந்திய விமானப்படை தயார் நிலையில் உள்ளது. இப்பிரதேசத்தைச் சூழ இந்திய தேசிய பாதுகாப்பு படை கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவர்.
அரங்கைச்சூழ முக்கிய இடங்களில் கமாண்டோ படையினர் தயார் நிலையில் வைக்கப்படுவர். கடற்படையும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும்.
அதேவேளை போட்டியின்போது வி.வி.ஐ.பிகள் மற்றும் வி.ஐ.பி.களின் 70 வாகனங்கள் மாத்திரமே அரங்கின் வாகனத் தரிப்பிடத்திற்கு அனுமதிக்கப்படும் எனவும் அதி உயர் அதிகாரிகள் உட்பட பொலிஸார் வாகனங்கள் எதுவும் அனுமதிக்கப்பட மாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
18 minute ago
33 minute ago
2 hours ago
2 hours ago
A.SIHAN Saturday, 26 March 2011 11:56 PM
Excellent ...
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
33 minute ago
2 hours ago
2 hours ago