Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2023 ஜூன் 09, வெள்ளிக்கிழமை
Editorial / 2023 மார்ச் 16 , பி.ப. 03:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
முல்லைத்தீவு மாவட்டத்தில் வேலையற்றிருக்கும் இளைஞர் யுவதிகளின் எதிர்காலத்தினை கருத்தில் கொண்டு தொழில்த்துறையில் வழிகாட்டிடும் நோக்கில் இன்றைய தினம் (16.03.2023) முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் தொழிற்சந்தை நடைபெற்றது.
இந்த தொழிற்சந்தை திறப்பு நிகழ்வினை மாவட்ட அரசாங்க அதிபர் திரு.க.விமலநாதன் திறந்து வைத்தார்.
UOULEAD, Federal Ministry of Economic Cooperation and Development , Child Fund Sri Lanka, Voice, ORHAN, BERENDINA நிறுவனங்களின் அனுசரணையிலும் மனித வலு வேலைவாய்ப்பு திணைக்களத்தின் ஒழுங்கமைப்பிலும் இந்த தொழிற்சந்தை இடம்பெற்றது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் வேலையற்றிருக்கும் இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தல், தொழில் வழிகாட்டல் , வெளிநாட்டு வேலைவாய்ப்பு வழிகாட்டல், உயர்கல்வி மற்றும் மூன்றாம் நிலைக்கல்வி வழிகாட்டல், சுய தொழிலை ஆரம்பித்தல் முதலான பல்வேறு வழிகாட்டல்களை உள்ளடக்கியதாக இந்த தொழிற்சந்தை அமைந்திருந்தது.
இந்த தொழிற்சந்தைக்கு முல்லைத்தீவு மாவட்டத்தின் அனைத்து பிரதேசங்களிலும் இருந்து 500க்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகள் கலந்துகொண்டிருந்தனர்.
இந்த நிகழ்வில் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் (நிர்வாகம்) , மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன், மனித வலு வேலைவாய்ப்பு திணைக்களத்தின் பிரதம கணக்காளர், மாவட்ட பிரதம கணக்காளர். மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட பிரதம உள்ளகக் கணக்காய்வாளர், மாவட்ட உதவி அரசாங்க அதிபர், உலக உணவுத் திட்டத்தின் மாவட்ட அலுவலகர், மாவட்ட நிர்வாக உத்தியோகத்தர், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர், மாவட்ட பல்நோக்கு அபிவிருத்தி செயலணியின் பணிப்பாளர், மாவட்ட புள்ளிவிபரவியலாளர், மாவட்ட பொறியியலாளர், ஏனைய பதவிநிலை உத்தியோகத்தர்கள், ஏனைய உத்தியோகத்தர்கள் , நாடளாவிய ரீதியில் செயற்பட்டுக்கொண்டிருக்கும் அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் அதிகாரிகள், பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர். செ.கீதாஞ்சன், சண்முகம் தவசீலன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
12 minute ago
41 minute ago
49 minute ago