2025 நவம்பர் 02, ஞாயிற்றுக்கிழமை

பாகிஸ்தானின் 84ஆவது தேசிய தினம்

Freelancer   / 2023 மார்ச் 23 , பி.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பில் உள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான, ஆற்றல்மிக்க, முற்போக்கான, சகிப்புத்தன்மை மற்றும் ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் பாகிஸ்தானின் 84ஆவது தேசிய தினத்தை கொண்டாடியது.

இலங்கையில் உள்ள பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் உயர் ஸ்தானிகர், மேஜர் ஜெனரல் (ஓய்வு நிலை) உமர் பாரூக் பர்கி பாகிஸ்தான் தேசிய கீதம் இசைக்கப்படும் வேளையில் பாகிஸ்தானின் தேசியக் கொடியை ஏற்றி இந்நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.பின்னர், பாகிஸ்தான் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் செய்திகள் பார்வையாளர்களுக்கு வாசிக்கப்பட்டது.

பாகிஸ்தானின் உயர் ஸ்தானிகர் இங்கு உரையாற்றுகையில்,  "பரஸ்பர நம்பிக்கை மற்றும் புரிந்துணர்வு அடிப்படையில் இலங்கையுடனான தனது உறவுகளை பாகிஸ்தான் பெரிதும் மதிக்கிறது.  இந்த உறவானது, அரசியல், வர்த்தகம், பாதுகாப்பு, கலாச்சாரம், கல்வி மற்றும் மக்களிடையேயான தொடர்புகள் போன்ற பல்வேறு துறைகளை உள்ளடக்கியிருப்பது  மிகுந்த திருப்தி அளிக்கிறது" என்றும் குறிப்பிட்டார்.

எதிர்வரும் ஆண்டுகளில் தொடர்ச்சியான முன்னேற்றம், அமைதி, தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்காக இலங்கை அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் பாகிஸ்தான் அரசாங்கம் மற்றும் மக்கள் சார்பாக உண்மையான வாழ்த்துக்களையும் உயர் ஸ்தானிகர் தெரிவித்துக்கொண்டார்.

கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தான் தேசிய தின வரவேற்பு நிகழ்வு

கொழும்பிலுள்ள பாகிஸ்தான்  உயர்ஸ்தானிகராலயம் பாகிஸ்தான் தேசிய தின வரவேற்பு நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. 

இதில் இலங்கை அரசியல் தலைமைகள், இராஜதந்திர அதிகாரிகள், சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரிகள், அரசாங்கப் பிரதிநிதிகள், பிரபல வர்த்தகப் பிரமுகர்கள், மற்றும் பாகிஸ்தானிய ஆதரவாளர்கள் என பெருமளவிலான பங்கேற்பாளர்கள் கலந்துகொண்டனர்.

இதன் போது கருத்துதெரிவித்த பாகிஸ்தானின் உயர் ஸ்தானிகர்  மேஜர் ஜெனரல் (ஓய்வு நிலை) உமர் பரூக் பர்கி அவர்கள், 

பாகிஸ்தானும் இலங்கையும் பரஸ்பர மரியாதை மற்றும் நம்பிக்கையின் அடிப்படையில் நெருங்கிய உறவுகளை தொடர்ந்து பேணி வருகின்றன. வர்த்தகம், பாதுகாப்பு, விஞ்ஞானம், கலாசாரம் மற்றும் கல்வி போன்ற பல துறைகளில் பாகிஸ்தான் - இலங்கை உறவு அடங்கியுள்ளது என்று குறிப்பிட்ட அவர், இலங்கை அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் பாகிஸ்தான் அரசாங்கம் மற்றும் மக்கள் சார்பாக வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர மற்றும் இந்நிகழ்வில் கலந்துகொண்ட  அனைவருக்கும் உயர்ஸ்தானிகர் நன்றி தெரிவித்ததோடு இரு நாடுகளும் தமது 75 வருட நட்புறவைக் கொண்டாடும் நிலையில், இந்த வருடம் பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கும் விசேடமானது எனவும் உயர்ஸ்தானிகர் சுட்டிக்காட்டினார்.

தேசிய தின வரவேற்பையொட்டி கலாச்சார கண்காட்சி ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கண்காட்சியின் போது பாரம்பரிய கைவினைப் பொருட்கள், ட்ராக் வண்டி கலை, ஆடைகள் போன்றவை காட்சிப்படுத்தப்பட்டன. இக்கலாச்சார கண்காட்சியானது அனைவரினதும்  கவனத்தை ஈர்த்தமை குறிப்பிடத்தக்கது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X