Princiya Dixci / 2021 ஒக்டோபர் 04 , பி.ப. 04:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

வ.சக்தி, வா.கிருஸ்ணா, க.விஜயரெத்தினம், கனகராசா சரவணன்
உலக சுற்றுலா தினத்தையொட்டி, மட்டக்களப்பு நகரில் விசேட விமான சுற்றுலா ஒன்றை, இலங்கை சுற்றுலா கைத்தொழில் சம்மேளனம், இன்று (04) நடத்தியது.
இது தொடர்பான எல்லா ஒழுங்குகளையும் சுற்றுலா கைத்தொழில் சம்மேளனத்தின் தலைவர் எ.எம்.ஜௌபர் மேற்கொண்டிருந்தார்.
சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில், சுற்றுலா விமான சேவைகள் அமைச்சின் அனுசரணையுடன் ஒழுங்கு செய்யப்பட்ட இந்நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் கே.கருணாகரன் கலந்துகொண்டு ஆரம்பித்துவைத்தார்.
கிழக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைவர் ஹரிப்பிரதாப், வர்த்தக சம்மேளனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கே.எஸ்.தாசன், மட்டக்களப்பு சுற்றுலா அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் என்.எ.நிறோசான் மற்றும் 231ஆவது படைப்பிரிவின் கேணல் டிலூப பண்டார ஆகியோரும் இதில் கலந்துகொண்டிருந்தனர்.




14 Mar 2026
14 Mar 2026
14 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Mar 2026
14 Mar 2026
14 Mar 2026