2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

தெளிவத்தை ஜோசப் காலமானார்

R. Yasiharan   / 2022 ஒக்டோபர் 21 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் மூத்த எழுத்தாளர் சாகித்தியரத்னா தெளிவத்தை ஜோசப் (சந்தனசாமி ஜோசப்) சுகவீனம் காரணமாக இன்று காலமானார். கடந்த சில மாதங்களாக சுகவீனமுற்றிருந்த நிலையில் இன்று காலை அவர் காலமானார். 

பெப்ரவரி 16, 1934 ஆண்டு பிறந்த அவர், ஈழத்தின் சிறுகதையாளர், நாவலாசிரியர், இலக்கிய ஆய்வாளர் ஆவார். இலங்கையின் மலையகப் படைப்பாளிகளில் முக்கியமான ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அறுபதுகளில் எழுதத்தொடங்கி எழுபதுகளில் இலக்கிய உலகில் தனித்துவம் மிகுந்த படைப்பாளியாக மலர்ந்தவர். அத்துடன் இலங்கை தமிழ் ஊடகங்களால் பல்வேறு  ஆக்கங்கள், கட்டுரைகளையும் எழுதியுள்ளார். அதேபோல் இதுவரை ஆறு நாவல்களையும், மூன்று சிறுகதை தொகுதிகளையும் வெளியிட்டுள்ள தெளிவத்தை ஜோசப், இலங்கையில் தயாரிக்கப்பட்ட புதிய காற்று திரைப்படத்திற்கும் தொலைக்காட்சி நாடகமொன்றுக்குத் திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார்.

கொழும்பில் நாளைய தினம் (22) இடம்பெறவிருந்த "குளிரும் தேசத்துக் கம்பளிகள்" புத்தக வெளியீடும் அவரது தலைமையில் இடம்பெறவிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .