2021 ஒக்டோபர் 26, செவ்வாய்க்கிழமை

Miss World - 2018

Editorial   / 2018 பெப்ரவரி 10 , பி.ப. 02:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவின் சான்யா நகரில், நேற்று முன்தினம் (09) நடைபெற்ற 68ஆவது உலக அழகிப் போட்டியில், மெக்சிகோவைச் சேர்ந்த வனிசா போன்ஸ் டி லியோன் (வயது 26), 2018ஆம் ஆண்டுக்கான “மிஸ் வேர்ல்ட் - 2018” பட்டத்தை வென்றார்.

கடந்தாண்டு உலக அழகிப் பட்டத்தை வென்ற இந்தியாவைச் சேர்ந்த மனுஷி சில்லர், வனிசாவுக்கு உலக அழகிக்கான கீரீடத்தைச் சூட்டினார்.

118 போட்டியாளர்கள், இந்தப் போட்டியில், இலங்கையைச் சேர்ந்த நதியா கயி (Nadia Gyi) பங்கேற்றிருந்தார். இந்தியப் போட்டியாளர் அனு கீர்த்தி, முதல் 12 பேர் பட்டியலில் கூட உள்ளங்கவில்லை. ஆசியா கண்டத்தைச் சேர்ந்த நேபாளம் மற்றும் தாய்லாந்துப் போட்டியாளர்கள், இறுதி 11 பேரில் அடங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .