2023 செப்டெம்பர் 29, வெள்ளிக்கிழமை

காட்டுக்குள் துப்பாக்கி மீட்பு; சந்தேக நபர் தப்பியோட்டம்

Editorial   / 2020 செப்டெம்பர் 28 , பி.ப. 01:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜூட் சமந்த

கருவலகஸ்வெவ- மதவாச்சி காட்டுப்பகுதியில் இருந்து, துப்பாக்கி ஒன்றும் அதற்குப் பயன்படுத்தும் ரவைகள் மற்றும் 2 கிலோ கிராம் மான் இறைச்சி  என்பவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

வன விலங்குகளை வேட்டையாடும் நோக்கில் , துப்பாக்கியுடன் காட்டுக்குள் ஒருவர் செல்வதாக, பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து, பொலிஸார் நேற்று (27) சுற்றிவளைப்​பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது, பொலிஸாரை கண்டு சந்தேக நபர் தப்பியோடியுள்ளதுடன், துப்பாக்கி மற்றும் ஏனைய உபகரணங்களை கைவிட்டுச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் மானை வேட்டையாடி, அதனை இறைச்சியாக்கி காட்டுக்குள் வைத்​து விற்பனை செய்திருப்பதாக, ஆரம்பகட்ட  விசாரணைகளில் தெரியவந்துள்ளது.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .