2021 ஒக்டோபர் 17, ஞாயிற்றுக்கிழமை

கம்பஹாவிலேயே அதிக தொற்றாளர்கள்

Gavitha   / 2021 மார்ச் 10 , பி.ப. 03:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

நேற்று (09) முதல், இன்று (10) வரையான 24 மணி நேரத்தில், நாட்டில் புதிதாக, 304 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர் என, கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைத்தடுக்கும் செயலணி தெரிவித்துள்ளது.

அவர்களிடையே 16 பேர், வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்குத் திரும்பியவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.

எஞ்சிய 288 பேரில், அதிகளவான நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இன்று (10) காலை வரையில், நாட்டில் மொத்தமாக 86,343 தொற்றாளர்கள் பதிவாகியுள்ள அதேநேரம், 82,753 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

நேற்றை (09), 04 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

உடுவில், அக்குரணை, ஹொரபே மற்றும் ராகமை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நால்வரே இவ்வாறு உயிரிழந்தவர்களாவர்.

இதன் பிரகாரம், நாட்டில் இதுவரை 511 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில், நாட்டில் நேற்று 6,694 PCR பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .