2023 ஜூன் 07, புதன்கிழமை

இராஜாங்க அமைச்சரின் வாகனம் மோதி காயமடைந்தவர் மரணம்

Editorial   / 2022 நவம்பர் 01 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த மாதம் 15ஆம் திகதியன்று இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் அதிசொகுசு வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை மரணமடைந்தார்.

படுகாயமடைந்த அவர் குருநாகல் வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையிலேயே 15 நாட்களுக்குப் பின்னர் நேற்று முன்திகம் (30)  மரணமடைந்தார்.

புத்தளம் முள்ளிப்புரம் மீன்பிடி கிராமத்தில் வசிக்கும் மொஹமட் சிஹாம் (வயது 48) என்பவ​ரே மரணமடைந்துள்ளார்.

மொஹமட் சிஹாம் செலுத்திவந்த சிறிய ரக வாகனத்தை இராஜாங்க அமைச்சரின் வாகனம் புத்தளம் நகரத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த போது முந்திச் செல்ல முற்பட்ட வேளையிலேயே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தில் படுகாயமடைந்தவர், புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், குருநாகல் வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைகளுக்காக மாற்றப்பட்டார். அங்கு அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு, 15 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே மரணமடைந்தார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .