2021 நவம்பர் 29, திங்கட்கிழமை

சிலாபம் பெருந்தோட்ட நிறுவனம் பூட்டு

S. Shivany   / 2020 நவம்பர் 12 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிலாபம் பெருந்தோட்ட நிறுவனத்தின் பிரதான காரியாலயத்தை இன்று, நாளை (12,13) ஆகிய இரு தினங்கள் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சிலாபம் நகரில் அமைந்துள்ள மேற்படி நிறுவனத்துக்குச் சொந்தமான  காரியாலயத்தில், பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதையடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த 10 ஆம் திகதி மேற்படி காரியாலயத்துக்கு வருகைதந்த சகலரையும் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுமாறு, பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .