2023 செப்டெம்பர் 28, வியாழக்கிழமை

முந்தல் பிரதேச அபிவிருத்திக் குழுக்கூட்டம்

Editorial   / 2020 செப்டெம்பர் 24 , பி.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஸீன் ரஸ்மின்

முந்தல் பிரதேச அபிவிருத்திக் குழுக்கூட்டம் நேற்று (23) முந்தல் பிரதேச செலயக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதன்போது, முந்தல் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிராமங்களில் உள்ள கல்வி, சுகாதாரம், போக்குவர்து, மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட குறைபாடுகள் மற்றும் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்திப் பணிகள், எதிர்காலங்களில் முன்னெடுக்கப்பட வேண்டிய அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும்  இதன்போது கலந்துரையாடப்பட்டன.

அத்துடன், ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்து வரும் சகல வேலைத்திட்டங்களையும் , முந்தல் பிரதேசத்தில் நடைமுறைப்படுத்துவதற்கு அரச உத்தியோகத்தர்கள் தமது முழுமையான பங்களிப்பை வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட  பிரதேச அபிவிருத்திக்குழுத் தலைவரும், கிராமிய மற்றும் பிரதேச கருத்திட்ட இராஜாங்க அமைச்சருமான சனத் நிசாந்த பெரேரா, ஆளும் , எதிர்க்கட்சி என்று இல்லாமல் அனைத்து அரசியல் பிரமுகர்களும் தமது ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும் எனவும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .